Thursday, 27 September 2012

ஆன்மாவின் ஒளியைத் தேடி...


கல்லுக்குள் ஈரம்
கனியிதழ் பிழியும் விடம்
மலருக்குள் துயிலும் மரணம்
முல்லை மலர் இதழ்
புலராத பொழுதில்
பனித்துளிச் சுவாசங்கள்
தென்றல் இசையில்
மெலிர்க்கொடி துயிலும்.

மனித மனம்
இந்த சமுதாய பாசறை
எங்கிருந்து
எதற்காய்...எதனிலிருந்து
எதனைத்தேடி...
படைத்து உயிர்ப்பித்து
பாசம் வைத்து பரிசளித்து…

நான்...நீ...
என்ற உணர்வுகள்  தவிர்த்து     
ஒன்றிலிருந்து ஒன்றாய்
ஒன்றின் உணர்வுகளாய்
தன்னிலை இழந்து
பிரிதொன்றைத் தேடி...

உதயம்...அந்திமம்
ஒளிக்குள் சுடரும் இருள்
அகத்தின் வேற்றுமையாய்
வெளிப்படும்...
நிஜங்களின் தோற்றப் பொழிவு.
நிறங்களின் மாயை
உண்மையின் கதகதப்பு
அனைத்தும்
எல்லாவுமாய்...
இந்த பிரளயத்தின் சுழற்சி
இடர்பாடுகள் தவிர்த்து
ஆன்மாவின் ஒளியைத் தேடி...     

No comments:

Post a Comment