Thursday, 27 September 2012

உதயத்தின் மலர்ச்சியே !..


சுவாசமே !..
உதயத்தின் மலர்ச்சியே !..
மணம் சொரிந்து துவழும்
மென்மையே...
மென்மையின் வார்ப்பாம்
வர்ண கோலங்கள்
வருடல்கள்...இதமாம்
உனக்குள்
படர்ந்துச் சிறக்கும்
அவளின் சுவாசங்கள்
தழுவிப் புலரும்
உயிர் மூச்சு...
மாலை மயக்கும் வேளை
மயிலிறகு மஞ்சம்
உன்னில் தனை இழந்து
அவளில் இழைந்திருக்க...
நட்சத்திரங்கள்...ஏனோ...
கண்சிமிட்டி நகைத்தன
தென்றலோ
ஏதுமறியாது
விழித்துக் கொண்டிருந்தான்.

No comments:

Post a Comment