Thursday, 27 September 2012

விழித்திருந்தும் குருடர்கள்


இரவில் விழித்திருந்து
பயிர்க் காத்து
உயிர்க் காத்து
விவசாயிகளின் தோழனாய்
ஆந்தை நண்பா !
செய்த நன்மைக்காய்
தூக்கிலிடப் படுவது
புதிதன்று...
சரித்திரத்தைப் புரட்டிப்பார்
மனிதனுக்கும்
பார்வைக் கோளறுதான்
உன்னைப் போலவே
விழித்திருந்தும் குருடர்கள்
மானுடத்திற்கு
நன்மை செய்தும்
நீ...சுமக்கும்
அவப்பெயர்...
அக்கினிப் பிரவேசங்கள்
இன்றல்ல
தொன்று தொட்டு...
என்று தனியும் இப்பொய்மைகள்

No comments:

Post a Comment