Monday, 30 July 2012

பூவே...பூவையாய் பூத்தாளோ!


ஒற்றை ரோசா
தென்றலில் இழைந்து
இசைத்தது-
செளந்தர்யம்   முழுமையும்
இமைகளுக்குள்   
நளிணமாய்ச் சங்கமித்தது.

இதழ்களில் துளிர்ந்த
தேன் துளிகள்
செவ்விதழ்களின்
அமுத ஊற்றாய்
பெருகியது.                

துவளும்-
மெலிர் காம்பு
தளிர் நடணம்.
குவழை மலர் விழியாய்      
மொட்டு-
நாட்டிய நர்த்தணங்கள்.

படர்ந்து
புலர்ந்த
நினைவின் கனவு.
தரிசணங்கள் தவமாய்
உயிர்ப்பித்து-
உயிரோவிய பரிணாமம்.          

பூவைக்குள்
பூ... பூத்ததோ!
பூவே...பூவையாய்
பூத்தாளோ!                
மதி முகம்
களங்கமின்றி
மெண்மையாய் வெளிப்பாடு.
விழிகள் தோற்று 
மனதைப்  பார்க்க
மனதோ!..
உணர்வை வருட …
தென்றலின் ஸ்பரிசம்
மிருதுவாய்.
மழைச் சாரல்
குளிர்ச்சி
சிலிர்த்து விழித்தேன்
மலர் இதழா...
மதி முகமா!..

மலரே!..
நீயே...சொல்லிவிடு
உன்னிடம்-
தோற்றுப் போவதில்
மகிழ்ச்சித்தான்.                   
                                மு. ஆ. பீர்ஒலி.
 

No comments:

Post a Comment