நந்தவனங்கள் ஏனோ...குறைந்துவிட்டன.
தேன் சிட்டே !
உன் அசைவின் வேகம்
புலன்களைத் தாண்டி
வலம்...இடம்
மேல்...கீழ்
பின்னோக்கி
தலை கீழாய்
பறப்பாய்...
அந்தரத்தில் நிற்பாய்
யாவரையும் ஈர்ப்பாய்...
மனிதன் போல்
நீயும்
ஒரு வித்தைக் காரன்தான்.
நந்தவனங்கள் ஏனோ...
குறைந்துவிட்டன.
மு.
ஆ. பீர்ஒலி.
No comments:
Post a Comment