விண்வெளியில் மேகமாய்
சிறகடித்து…
தென்றலில் இசைப்பாடி
குளிர் சாரல் தழுவல்களில்
மெய்யுருகி
என் உயிரே
உனக்குள் சுவாசமாய்
உயிர்ப்பித்தேன்.
என் விழி மலர்கள்
உன் நினைவில்
மயங்கி கிறங்க
உன் உயிர் உணர்வுகள்
என் தளிர் மேனியில்
இழைந்து கிடக்க...
மேகமாய்ப் பிரசவித்து
பொய்கையில் தவழ்ந்து
மலராய்...
உனக்குள்
பூத்துச் சிறந்திட...
கனவின் கரம் பிடித்து
வசந்தத்தின் விளிம்பில்
துயிலா துயில் கொண்டென்னை
உயிர்த் துணையாய்
உயிர்ப்பிக்கும் நாளென்றோ ?
அன்பே !... என்னவளே !...
தனிமையை துணையக்கி
கண்ணீரில் உனை மிதக்க விட்டு
என் உயிர் நிலைத்திடுமா ?
உனக்குள்
கறைந்து போனதென் உயிர்
உனக்குள்
இசைத்துக் கொண்டிருக்கும்
என் ஆத்மாவின்
துடிப்புக்களை உணர்த்தவில்லையா ?.
விழித்தெழு...இனியவளே !
-- மு. ஆ. பீர்ஒலி.
சிறகடித்து…
தென்றலில் இசைப்பாடி
குளிர் சாரல் தழுவல்களில்
மெய்யுருகி
என் உயிரே
உனக்குள் சுவாசமாய்
உயிர்ப்பித்தேன்.
என் விழி மலர்கள்
உன் நினைவில்
மயங்கி கிறங்க
உன் உயிர் உணர்வுகள்
என் தளிர் மேனியில்
இழைந்து கிடக்க...
மேகமாய்ப் பிரசவித்து
பொய்கையில் தவழ்ந்து
மலராய்...
உனக்குள்
பூத்துச் சிறந்திட...
கனவின் கரம் பிடித்து
வசந்தத்தின் விளிம்பில்
துயிலா துயில் கொண்டென்னை
உயிர்த் துணையாய்
உயிர்ப்பிக்கும் நாளென்றோ ?
அன்பே !... என்னவளே !...
தனிமையை துணையக்கி
கண்ணீரில் உனை மிதக்க விட்டு
என் உயிர் நிலைத்திடுமா ?
உனக்குள்
கறைந்து போனதென் உயிர்
உனக்குள்
இசைத்துக் கொண்டிருக்கும்
என் ஆத்மாவின்
துடிப்புக்களை உணர்த்தவில்லையா ?.
விழித்தெழு...இனியவளே !
-- மு. ஆ. பீர்ஒலி.
No comments:
Post a Comment