பார்த்தேன் உணர்ந்தேன்
மனம்தேன் மலைத்தேன்
மணந்தேன் உயிர்த்தேன்.
இடைத்தேன் இழைத்தேன்
இதழ்தேன் மலர்ந்தேன்
விழித்தேன் படித்தேன்
மொழித்தேன் சுவைத்தேன்
சுவைத்தேன் கொடுத்தேன்
சுனைத்தேன் நனைந்தேன்
நினைத்தேன் பனித்தேன்
நிலைத்தேன் நீர்த்தேன்.
கலைத்தேன் கவித்தேன்
கனித்தேன் கணிந்தேன்
பயிர்த்தேன் பசித்தேன்
திளைத்தேன் தொலைந்தேன்.
--மு.
ஆ. பீர்ஒலி.
No comments:
Post a Comment