Saturday, 21 July 2012

ஒரு மரணம்... ஒரு ஜனனம்...


மரங்கொத்திப் பறவை
கொத்தித் துளைத்து
 துளைத்து...
அந்த மரத்தின்
தண்டு வடத்தை
அரித்து... சிதைத்த...
சின்னஞ்சிறு பூச்சிக்களை
இரையாக்கி...
உயிர்ப்பித்தது.
உயிர் பெற்ற மரமோ !
வேதனை நீங்கி -
அடைக்கலம் தந்து
அரவணைத்தது.
வயிற்றிர்க்குள்
கட்டிய கூட்டில்
இப்பொழுது -
குஞ்சுகள்
சிறகடித்துக் கொண்டிருந்தன.
                                               

 








No comments:

Post a Comment