Monday, 30 July 2012

பூவே...பூவையாய் பூத்தாளோ!


ஒற்றை ரோசா
தென்றலில் இழைந்து
இசைத்தது-
செளந்தர்யம்   முழுமையும்
இமைகளுக்குள்   
நளிணமாய்ச் சங்கமித்தது.

இதழ்களில் துளிர்ந்த
தேன் துளிகள்
செவ்விதழ்களின்
அமுத ஊற்றாய்
பெருகியது.                

துவளும்-
மெலிர் காம்பு
தளிர் நடணம்.
குவழை மலர் விழியாய்      
மொட்டு-
நாட்டிய நர்த்தணங்கள்.

படர்ந்து
புலர்ந்த
நினைவின் கனவு.
தரிசணங்கள் தவமாய்
உயிர்ப்பித்து-
உயிரோவிய பரிணாமம்.          

பூவைக்குள்
பூ... பூத்ததோ!
பூவே...பூவையாய்
பூத்தாளோ!                
மதி முகம்
களங்கமின்றி
மெண்மையாய் வெளிப்பாடு.
விழிகள் தோற்று 
மனதைப்  பார்க்க
மனதோ!..
உணர்வை வருட …
தென்றலின் ஸ்பரிசம்
மிருதுவாய்.
மழைச் சாரல்
குளிர்ச்சி
சிலிர்த்து விழித்தேன்
மலர் இதழா...
மதி முகமா!..

மலரே!..
நீயே...சொல்லிவிடு
உன்னிடம்-
தோற்றுப் போவதில்
மகிழ்ச்சித்தான்.                   
                                மு. ஆ. பீர்ஒலி.
 

Saturday, 28 July 2012

மலரோடு தென்றலின் சுவாசம்…



 
கரு விழியின் பாவை
கனி இதழில் சுவை
முந்தானை மொட்டிற்குள்
தேன் மதுரம்
தேக முழுமையும் 
அமிழ்ந்து நெகிழ்ந்து
உருகி உணர்ந்து
உயிர்ப்பித்து..
உயிர்ப்பித்து
புதினமாய்ப்  புணர்ந்து
 
புலராத
நீண்ட சகாப்தம்
படைத்து வென்றிட
பிறந்தனையோ!...
அன்றி...
பிறிதொன்றா!...               Bottom of Form
   
                            மு. ஆ. பீர்ஒலி.

Thursday, 26 July 2012

கண்ணீர்த்துளிகள்


சிப்பி
தனக்குள்
சேகரித்து வைத்த
கண்ணீர்த் துளிகள்
முத்தாய்ப் பிரசவித்தது.
                                       
                                 -- மு. ஆ. பீர்ஒலி.