Saturday, 11 August 2012


முற்கட்ளின் வேதனை


என்னைத் தீண்டி
சிதைப்பது
நீயல்லவா..
வலியின் வேதனையுடன்
உன் 
சாபத்தையுமல்லவா
சேர்ந்து  சுமக்கிறேன்.

Friday, 3 August 2012

ஆன்மாவின் தேடல்


உன் மனதை நானும்
என் மனதை நீயும்
நம் இருவரால் மட்டுமே
ஒருவரை ஒருவர்
வென்றிட முடிந்தது
அன்பும் காதலும்
இருபுறமும்
மலர்ந்து மயங்கிட
பெருகித் தழும்பும்
நம் காதல் பொய்கையில்
மூழ்கி முத்தெடுக்கும் நாளென்றோ !.. 
                             
 
                                              மு. ஆ. பீர்ஒலி.
    

Thursday, 2 August 2012

உயிர்மூச்சு சுவாசங்கள்…




 நிலவின்  கண்ணீர்
தொலைந்தன  மேகம்
அலைமகள்  விம்மல்கள்
சுருண்ட   நிலமகன்
முற்களின்   உறுத்தல்கள்
துவண்ட  ரோசாக்கள்
சிதைந்து  கிடந்த
புல்வெளி
பாதச் சுவடுகள்.
உணர்தல் உணர்வற்று
உயிர்மூச்சு  சுவாசங்கள்…
            எதனைத் தேடி ?.    
  
                                  மு. ஆ. பீர்ஒலி.
            
        

மயில் இறகே !...


அன்று-
புத்தக  இதழில்
சொருகி வைத்த
மயில் இறகு
நித்தம் நித்தம்      
பார்வையிட்டு
பெரியவளானாள்.
இன்று-
இவள் குழந்தை
தினமும்
தரிசித்துக் கொண்டிருந்தாள்
மயில் இறகே !... 
மயில் இறகே.

மாயத்தோற்றம்


குயில்
குரல் இனிமை
புறாவின்
தோற்றம் அழகுதான்
அகம் புறம்
             எத்தனை மாயை...            

ராகம் தேடும் பல்லவி




 
இரவில்
நட்சத்திரங்களைப்
போர்த்தியவள்
பகலில்
            சருகுகளுடன் பயணித்தாள்...             


                                    மு. ஆ. பீர்ஒலி.

வெட்கிய நாணல்


வளைந்து பணிவது           
என் தத்துவம்
மனிதனே
தவறய்ப் புரிந்தனையோ !
ஆபத்தில் விடுபடுவதற்கே
பிறரை
மூழ்கடிக்க அல்லவே.
 
                                    மு. ஆ. பீர்ஒலி.